செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் சிறப்பு பஜனை
ADDED :807 days ago
செஞ்சிக்கோட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். பாகதவர்கள் மற்றும் ஆண்டாள் கோஷ்டிகளின் பஜனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.