உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமெரிக்கா, நியூயார்க்கில் விநாயகர் சதுர்த்தி தேரோட்டம்; கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்

அமெரிக்கா, நியூயார்க்கில் விநாயகர் சதுர்த்தி தேரோட்டம்; கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்

நியூயார்க்: அமெரிக்கா, நியூயார்க்கில் உள்ள கணேசர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது . அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் உள்ள கணேசர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி மேள, தாளம் முழங்கிட தேர்பவனி நடந்தது. பக்தர்கள் ஆடி , பாடியபடி தேர் பவனியில் பங்கேற்றனர். கோயிலில் தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொட்டும் மழையில் பக்தர்கள் நடனமாடி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !