மேலும் செய்திகள்
குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
714 days ago
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா
714 days ago
செய்துங்கநல்லுார்: தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள, கருங்குளம் வெங்கடாஜலபதி கோயிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமை கருடசேவை நடந்தது. காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம் 6:30 மணிக்கு திருமஞ்சனமும். 7:29 மணிக்கு உற்சவர் சீனிவாச பெருமாள், தெற்கு கோயிலுக்கு எழுந்தருளினார், 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், தொடர்ந்து அலங்கார, தீபாராதனை, மதியம் 1:00 மணிக்கு அன்ன தானம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சாயரட்சை, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி அலங்காரம் செய்து மாலைகள் சாற்றப்பட்டு 10:30 மணிக்கு கருட வாகனத்தில் மலையில் சுற்றி வந்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராஜேஷ், நிர்வாகஅதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர்நம்பி, கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
714 days ago
714 days ago