பழநியில் பக்தர்கள் கூட்டம்; காத்திருந்து தரிசனம்
ADDED :1039 days ago
பழநி: பழநி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் வருகை புரிந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச் வரிசையிலும் பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். மலைக் கோயிலில் வெயிலில் தாக்கம் அதிகம் இருந்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். பழநி மலை அடிவாரம், கிரிவீதி சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்தது. திருஆவினன்குடி கோயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. அடிவாரம் முக்கிய வீதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.