உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனாதனம்; தாய் பேச்சு கேட்காத மகனை திருத்துங்கள்.. மன்னார் குடி ராமானுஜ ஜீயர்

சனாதனம்; தாய் பேச்சு கேட்காத மகனை திருத்துங்கள்.. மன்னார் குடி ராமானுஜ ஜீயர்

விழுப்புரம்; விழுப்புரத்தில், மன்னார் குடி ராமானுஜ ஜீயர் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி பேசிய நிலையில், அவரின் தாய் துர்கா, சனாதன தர்மத்தின் வழிகாட்டியாக நெற்றியில் குங்குமம், காலில் மெட்டி அணிந்து உள்ளார். தாய் பேச்சைக் கேட்காத மகன் உதயநிதியை அனைவரும் சேர்ந்து திருத்த வேண்டும். சனாதனம் பற்றி அரசியல்வாதிகள் சிலர் அவர்களின் சுய லாபத்திற்காக பேசுகின்றனர். சனாதனம் பற்றி பேசுவோர், அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் சனாதனத்தை விட்டு வெளியே வராமல் இருப்பதை கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !