உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர்கள் வாழும் சதுரகிரியில் வழிபாடு; இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

சித்தர்கள் வாழும் சதுரகிரியில் வழிபாடு; இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு இன்று (செப். 27) முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும், எதிர்பாராத விதமாக கனமழை பெய்தால் பக்தர்கள் மலை ஏறுவது நிறுத்தி வைக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !