உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாக சக்தி அம்மன் தியான பீடத்தில் நந்திக்கொடி யோகேஸ்வரன் சுவாமிகள் கூட்டு பிரார்த்தனை

நாக சக்தி அம்மன் தியான பீடத்தில் நந்திக்கொடி யோகேஸ்வரன் சுவாமிகள் கூட்டு பிரார்த்தனை

கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருள்மிகு ஸ்ரீ நாக சக்தி அம்மன் தியான பீடத்திற்கு இன்று இலங்கை மட்டக்களப்பு முன்னாள் எம்பி நந்திக்கொடி யோகேஸ்வரன் சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு கலசம் மரியாதை தியான பீடத்தின் செயலாளர் கணேஷ் குமார் அவர்கள் தலைமையில் தரப்பட்டது. மரகதலிங்க அபிஷேக பூஜை இலங்கை வாழ் மக்கள் உடைய வாழ்வு பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தார். விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீலா ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கலச மரியாதையும் சிறப்பு பூஜைகளும் செய்து இலங்கை தமிழ் மக்கள் மீண்டும் சுயாட்சி பெற வேண்டும்.இலங்கை மக்களின் வாழ்வு பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !