உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில், திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின் உற்சவர் கோவில் வளாகத்தில் வலம் வந்தார். அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் அர்ச்சகர் மாலோலன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !