உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா; தேரோட்டம் கோலாகலம்

ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா; தேரோட்டம் கோலாகலம்

மேலூர்: வெள்ளலூர் நாட்டில் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா செப்.12 முதல் நடைபெறுகிறது. இன்று கோவில்பட்டியில் உள்ள ஏழைகாத்தம்மன் கோயில் முன் உள்ள தேரில் அம்மன் எழுந்தருளி கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிளம்பும் போது வெயில் சுட்டெரித்த நிலையில் கோயிலை சுற்றி வரும் போது மழை பெய்ததால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். நாளை மஞ்சள் நீராட்டும், அக். 3 கோயில் முன் உள்ள குளத்தில் பெரிய மது கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !