பாட புத்தகத்தில் சனாதனம் பற்றி பகுதியை நீக்க முடிவு
ADDED :758 days ago
சென்னை:தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 வகுப்பில், இந்திய அறநெறியும் பண்பாடும் என்ற பாடத்தில், பல்வேறு மதங்கள் குறித்த விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், சனாதனம் என்றால், நிலையான அறம் என, கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மகேஷ், அடுத்த ஆண்டில், பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களில் மாற்றம் செய்யப்பட்டு சனாதனம் என்ற பகுதி நீக்கப்படும், என்றார்.