மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4708 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4708 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4708 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் வைகுண்டமூர்த்தி அய்யனார் கோயில் நித்திய பாலாபிஷேகத்திற்காக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவரால் வைகுண்டமூர்த்தி அய்யனார் கோயில் கட்டப்பட்டது. அறநிலையத்துறைக்கு சொந்தமான, 500 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயில் பக்தர்கள், அரசு நிதியுதவியுடன் 2004 ம் ஆண்டுஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. வைப்புநிதி மூலம் இங்கு பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது. அறநிலையத்துறையால் நித்திய பாலாபிஷேகத்திற்காக தனியே வைப்புநிதி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்கள், திருப்பணி குழுவினர், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருப்பணி கமிட்டி தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். நல்லாசிரியர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி சரவணன் வரவேற்றார். கூட்டத்தில் புதிய உணவுக்கூடம் கட்டுதல், கோபுர பராமரிப்பு பணிகள் செய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோயிலில் உள்ள பெரியகருப்சாமிக்கு, நித்திய பாலாபிஷேகத்திற்காக கமிட்டி தலைவர் பழனிச்சாமி ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். உறுப்பினர்கள் பூமாலை, திருமுருகன், வைகுண்டமூர்த்தி, ஜெயபால் கலந்து கொண்டனர். நல்லாசிரியர் வைகுண்டம் நன்றி கூறினார்.
4708 days ago
4708 days ago
4708 days ago