/
கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனி; நெய் தீபம் ஏற்றி லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயரை வழிபட்ட பக்தர்கள்
புரட்டாசி சனி; நெய் தீபம் ஏற்றி லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயரை வழிபட்ட பக்தர்கள்
ADDED :841 days ago
கோவை: கோவை, உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழாவில் புஷ்ப அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.