உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரணம் சரணம் சரவண பவ ஓம்; புரட்டாசி சஷ்டி.. ; குமரனை வழிபட குறைகள் நீங்கும்!

சரணம் சரணம் சரவண பவ ஓம்; புரட்டாசி சஷ்டி.. ; குமரனை வழிபட குறைகள் நீங்கும்!

கந்தசஷ்டி விரதம் ஆறுமுகப்பெருமானுக்குரிய விரதமாகும். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானுக்குரிய விரதம். சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். முருகனை வழிபட குடும்பத்தில் துன்பங்கள், கடன் தொல்லை நீங்கும். முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும்.

இன்று திருப்பரங்குன்றத்தில் முருகனை தரிசித்தால் செல்வவளம் பெருகும். திருச்செந்தூரில் கந்தவேலைத் தரிசித்தால் எதையும் சாதிக்கும் தைரியம் கிடைக்கும். தண்டாயுதபாணியை பழநியில் வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும். தந்தைக்கு உபதேசித்த சுவாமிநாதனை சுவாமிமலையில் தரிசித்தால் கல்வி அபிவிருத்தி உண்டாகும். திருத்தணியில் தணிகைநாதனை வணங்கிவந்தால் திருமணத்தடைகள் நீங்கும். சோலைமலை முருகப்பெருமானைத் துதித்தால் தடைபட்ட செயல்கள் நிறைவேறும். மருதமலையில் தரிசித்தால் நோய்கள் நீக்கும். வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். இன்று எங்கு முருகனை வழிபட்டாலும் நிம்மதி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !