உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.  சாபம் நீங்கவும், பில்லி சூனியம் உள்ளிட்டவைகளின் பாதிப்புகள் நீங்கவும், புத்திர பாக்கியம் வேண்டியும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இன்று காலை 9:00 மணியளவில் மூலவர் வராகி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார் கோயில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !