வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :844 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்டுதோறும் காளியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா 3 நாட்கள் நடைபெறும். நேற்று மஞ்சளாற்றில் கரகம் எடுத்து வரப்பட்டது. அன்று பகலில் தீச்சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நாதஸ்வர, செண்டை மேளம் முழங்க நகரில் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தது. இறுதியில் மஞ்சளாற்றில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.