சனாதனத்திற்கு எதிரான பேச்சு: ஆதாரங்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED :828 days ago
சென்னை: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது தொடர்பாக அவருக்கு எதிராகவும், அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி., ராசாவுக்கு எதிராகவும் கிஷோர் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சரின் பேச்சுக்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் உதயநிதி சார்பில், அரசியல் காரணத்திற்காக நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது எனக்கூறப்பட்டது. சேகர்பாபு சார்பில், ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை அக்.,11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.