சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை அன்னக்கூடை உற்சவம்
 பண்ருட்டி, பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை (7ம் தேதி) புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னக்கூடை உற்சவம் நடக்கிறது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் நெய்தீப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாளை (7ம் தேதி) புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, காலை 6:00மணிக்கு சுப்ரபாதம், 6:15 க்கு கோ பூஜை, 7:00 மணிக்கு தோமாலை சேவை நடக்கிறது. 11:00 மணிக்கு அன்னக்கூடை உற்சவத்தில் உற்சவர் பெருமாள் கோவர்த்தன கிரிதரனாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பகல் 12:00மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5:00 மணிக்கு நடை திறப்பு, 6:00 மணிக்கு சாயங்கால தோமாலை சேவை, இரவு 8:30 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.