பழநி மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு ரத்து; கோவில் நிர்வாகம் அறிவிப்பு
ADDED :744 days ago
பழநி மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது. இத்தலத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். அதற்காக வரும் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை தங்கரத சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 24ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கரத புறப்பாடு புறப்பாடு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.