நீலம்பூர் பிளாக் மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு
ADDED :746 days ago
சூலூர்: நீலம்பூர் பிளாக் மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
சூலூர் அடுத்த நீலம்பூர் பிளாக் மாரியம்மன் கோவில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையை ஒட்டி தினமும் அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. புனித நீர் கலசங்கள் வைத்து, ஹோமம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. தீர்த்தாபிஷேகம் முடிந்து அலங்கார பூஜை நடந்தது. மகா தீபாராதனைக்கு பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.