ஹிந்து மதம் எங்களுக்கு எதிர்ப்பான மதம் அல்ல; அறநிலையத் துறை அமைச்சர்
ADDED :808 days ago
சிவகாசி ; அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சிவகாசி விஸ்வநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், அமைச்சர் உதயநிதி பங்கேற்பார். ஏற்கனவே அவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடக்கும், அனைத்து விசேஷங்களிலும் பங்கேற்றுள்ளார். ஹிந்து மதம் எங்களுக்கு எதிர்ப்பான மதம் அல்ல. நாங்கள் ஆதரிக்கிற, அரவணைக்கிற மதம். தி.மு.க., ஆஸ்திகர்களையும், நாத்திகர்களையும் ஒன்றாக அரவணைத்து செல்கிற இயக்கம். கோவில்களில் தமிழில் அர்ச்சனை முயற்சி துவக்கப்பட்டு, 48 முதுநிலை கோவில்களில் நடந்து வருகிறது. படிப்படியாக, அனைத்து கோவில்களிலும் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.