உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர் தரிசனம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர் தரிசனம்

காளஹஸ்தி:  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர் ஷியாமராவ் ஐஏஎஸ் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்ற அவர் காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள குரு தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் சார்பில் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் சாரதி, நாகபூஷணம்,  பார்த்தசாரதி ரெட்டி, கோபால் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !