ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1045 days ago
விழுப்புரம் : விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இக்கோவிலில், புரட்டாசி மாத உற்சவம் கடந்த 23ம் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து, 3ம் சனிக்கிழமையையொட்டி கடந்த 7ம் தேதி பெருமாள் கருட சேவையில் அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள துர்க்கை, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்த பக்தர்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, கோவில் முன் அலங்கரிக்கப்பட்ட மேடையில், ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய் ஆனந்த வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.