உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சிறப்பையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், காலசந்தி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தாயார் மண்டபத்தில் உபயநாச்சியார் சகிதம் பெருமாள், உற்சவர் சுவாமிகளை எழுந்தருள செய்தனர். சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரங்களுக்குப்பின் திருக்கல்யாணம் துவங்கியது. விஸ்வக்சேனர் வழிபாடு, பகவத் சங்கல்பம் உள்ளிட்ட பூஜை கள் நடந்தது. யாகம் பூர்த்தி செய்த பின் மேள வாத்தியங்கள் முழங்க பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !