வாலகுருநாத லிங்கேஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்
ADDED :768 days ago
வத்தலக்குண்டு: கிருஷ்ணாபுரம் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் வாலகுருநாத லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நந்தீஸ்வரருக்கும் லிங்கேஸ்வரருக்கும் நடத்தி வழிபாடு செய்யப்பட்டது. பாராயணங்கள், நாமாவளி பஜனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.