காளஹஸ்தி, கனகாசலம் மலை துர்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான நகரில் உள்ள கனகாசலம் மலை மீது வீற்றிருக்கும் துர்கை அம்மன் கோயிலில் வரும் 15ம் தேதி முதல் வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று சிவன் கோயில் வளாகத்தில் உள்ள குருதட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் தேவி நவராத்திரி மஹோத்ஸவங்கள் தொடர்பான சுவரொட்டிகளை வெளியிடப்பட்டன. தேவி நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்வுகளாக வரும் 21 ஆம் தேதி தேதி துர்காஷ்டமி, 22 ஆம் தேதி மஹர்நவமி, 23ம் தேதி விஜய தசமி விழா கொண்டாடப்படுகிறது. தேவி நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் நடைபெறும் இந்த நவராத்திரி விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.