உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனை தேடி.. ஹரித்துவார் முதல் ராமேஸ்வரம் வரை 2 ஆயிரம் கி.மீ. நடந்தே செல்லும் பக்தர்

சிவனை தேடி.. ஹரித்துவார் முதல் ராமேஸ்வரம் வரை 2 ஆயிரம் கி.மீ. நடந்தே செல்லும் பக்தர்

காரைக்குடி: உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹரித்துவார் முதல் ராமேஸ்வரம் வரை ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் மன அமைதி பயணம் மேற்கொண்டார்.

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகவேந்திர ஹவே 36. கருவிகள் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட இவர் அமைதிக்காக ஆன்மீக பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி ஹரித்துவாரிலிருந்து ராமேஸ்வரம் வரை நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தவர், கடந்த ஜூலை 20 ஆம் தேதி தனது நடை பயணத்தை தொடங்கினார் உத்தரப்பிரதேசம் மகாராஷ்ட்ரா, தெலுங்கானா வழியாக தமிழ்நாடு வந்தவர் திருவண்ணாமலையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி நேற்று நடந்து சென்றார். காரைக்குடிக்கு வழியாக நடந்து சென்று வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்ததோடு, அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், மன அமைதிக்காக நடைபயணம் மேற்கொள்வதாக தெரிவித்தவர் ராமேஸ்வரம் சென்றதும் ரயில் மார்க்கமாக சொந்த ஊர் திரும்புவதாவும், அடுத்தகட்டமாக அனைத்து முக்கிய சிவாலயங்களுக்கும் நடைபயணமாக செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !