உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தியில் தேவி நவராத்திரி விழா; அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

காளஹஸ்தியில் தேவி நவராத்திரி விழா; அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம்  காளஹஸ்தியில் தேவி நவராத்திரி விழாவை ஒட்டி  அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், காளஹஸ்தி சிவன் கோயிலின் துணை கோயிலான  பங்காரம்மன் கோவில் நவராத்திரி விழா இரண்டாம் நாளில் காயத்ரி தேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழக்கமாக ஆண்டு தோறும்  பங்காரம்மன் கோவிலில், ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறும். நவராத்திரி விழாவில் ஒன்பது நாட்களில் பாலாத்ரிபுர சுந்தரி, காயத்ரி தேவி, அன்னபூர்ணேஸ்வரி தேவி, மகாலட்சுமி தேவி, சுமங்கலி பூஜை, சரஸ்வதி  போன்ற அலங்காரங்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வர். அனைத்து பக்தர்களுக்கும் அம்மனை 9 நாட்கள் தரிசித்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று கோயில் அர்ச்சகர் கார்த்திக் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !