உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள்; பக்தர்கள் அகற்றம்

மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள்; பக்தர்கள் அகற்றம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மேல்முடி ரங்கநாதர் கோவில் செல்லும் வழியில், கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை பக்தர்கள் அகற்றினர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் குருவரிஷி மலைப்பகுதியில் மேல்முடி ரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கோவனூர் மலைப்பாதை வழியாக பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் சென்று, ரங்கநாதரை வழிபட்டு வந்தனர். பக்தர்கள் செல்லும் பாதையில் ஆங்காங்கே பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் ஆகியவற்றை வீசி சென்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதாலும், வன விலங்குகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில், குருவரிஷி மலை மேல்முடி ரங்கநாதர் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஈடுபட்டனர். சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், கோவனூர் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !