உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜயினி மகாகாலேஸ்வர் கோயிலில் தமிழக கவர்னர் ரவி அபிஷேகம் செய்து வழிபாடு

உஜ்ஜயினி மகாகாலேஸ்வர் கோயிலில் தமிழக கவர்னர் ரவி அபிஷேகம் செய்து வழிபாடு

மத்தியப் பிரதேசம்; தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலுக்கு இன்று தமிழக கவர்னர் ரவி தனது மனைவியுடன் வருகை தந்தார். மகாகாலேஸ்வர் கோவிலில் அதிகாலை 3:00 முதல் 5:30 வரை பிரம்ம முஹூர்த்தத்தின் போது செய்யப்படும் பஸ்ம ஆரத்தி பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து ஜலாபிஷேகம் செய்து சிவனை வழிபட்டார். கவர்னருக்கு மகாகாலேஷ்வர் கோவில் நிர்வாகக் குழு சார்பாக மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !