ராயிரநல்லூர் மலை துர்கை அம்மன் கோவில் விழா கோலாகலம்
ADDED :832 days ago
பாலக்காடு: ராயிரநல்லூர் மலை துர்கை அம்மன் கோவில் விழா கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி கொப்பம் நடுவட்டம் அருகே உள்ளது ராயிரநல்லூர் மலை துர்கை அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் ஐப்பசி மாதம் 1ம் தேதி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா இன்று வெகுவிமர்சியாக நடந்தது. அதிகாலை முதல் அம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வந்து கலந்து கொண்டு தரிசித்து வழிபட்டனர். பின்னர் பந்திருகுல புராணங்களின் புனித மனிதன் என்ற அறியப்படும் "நாறாணத்து பிராந்தனின் பிரமாண்ட உருவ சிலையை வணங்கி வலம் வந்து பக்தர்கள் மலை இறங்கின. நிகழ்ச்சியையொட்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.