உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவந்தியப்பர் கோயில் ஐப்பசி விசு ; பூம்பல்லக்கு வீதி உலா

சிவந்தியப்பர் கோயில் ஐப்பசி விசு ; பூம்பல்லக்கு வீதி உலா

விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரத்தில் சிவந்தியப்பர் கோயில் ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாள் பூம்பல்லக்கு வீதி உலா நடந்தது. விக்கிரமசிங்கபுரத்தில் வழியடிமைகொண்டநாயகி சமேத சிவந்தியப்பர் கோயிலின் ஐப்பசி விசு திருவிழா கடந்த9ம் தேதி துவங்கியது. 10ம் திருநாளான நேற்று காலை சுமார் 5 மணிக்கு சுவாமி, அம்பாள் அபிஷேகம், 9 மணிக்கு சுவாமி, அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா, மதியம் 12.30 மணிக்கு பாபநாசத்தில் ஐப்பசி விசு தீர்த்தவாரி, இரவு சுமார் 7 மணிக்கு பஞ்சமூர்த்தி அலங்கார தீபாராதனை மற்றும் வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !