நாகசக்தி பீடத்தில் நவராத்திரி; வராகி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
ADDED :761 days ago
மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியிலுள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், சப்தகன்னியர் பூஜை நடந்தது. விழாவில் இன்று வராகி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சண்டி, இந்திராணி, வைஷ்ணவி, பிரம்மி, மகேஸ்வரி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜை நடக்கும். அவ்வகையில் ஆறாம் நாளான நேற்று, சப்தகன்னியர் வழிபாடு நடந்தது. இதனையொட்டி ஒன்பது கன்னிப்பெண்களுக்கு அம்மன் அலங்காரமிட்டு, சிறப்பு பூஜை, ஆராதனையை பக்தர்கள் செய்தனர். விழாவில் இன்று வராகி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பீடத்தின் நிறுவனர் சிவசண்முக சுந்தரபாபு சுவாமிகள் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை சிவகங்கையை சேர்ந்த ஜான் பிரிட்டோ செய்திருந்தார்.