உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம்
ADDED :761 days ago
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக செல்லையா நியமிக்கப்பட்டுள்ளார். உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராக செல்லையா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ராதிகா சரவணன், ஏழுமலை ஆகியோரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் நியமனம் செய்து அதற்கான ஆணையினை வழங்கினார். அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்ட செல்லையா, சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டார்.