முருகன் கோயில்களில் நடைபெற்ற வளர் பிறை சஷ்டி பூஜை
ADDED :761 days ago
ரெகுநாதபுரம், : பிரப்பன்வலசையில் உள்ள மயூரநாதப்பெருமான், குமரகுருதாச சுவாமிகள் கோயிலில் நேற்று வளர்பிறை சஷ்டி விழா நடந்தது. மூலவருக்கு நடந்த சிறப்பு அபிஷேக, ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசை மயூரநாத சுவாமி கோயிலில் சஷ்டி விழா நடந்தது. மூலவர் மயூரநாதப்பெருமான், பாம்பன் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்னர்.