வடபழநி சக்தி கொலு; காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள்
ADDED :760 days ago
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் நேற்று, அம்பாள் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார். மேலும், நேற்று மாலை சொற்பொழிவும், அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.