சரஸ்வதி கையிலுள்ள வீணையைக் கொடுத்தது யார் தெரியுமா?
ADDED :760 days ago
தூய்மையை உணர்த்தும் பொருட்டு கலைமகள் வெண்ணிற ஆடையுடுத்தி, வெண்தாமரையில் வீற்றுள்ளாள். இவளது வாகனம் வெண்ணிற அன்னம். மொழியின் வடிவான இவள் கையிலுள்ள மாலை 51 எழுத்துக்களைக் குறிப்பன. இவள் கையிலுள்ள வீணையான கச்சபியை சிவபெருமான் உருவாக்கி சரஸ்வதிக்கு வழங்கினார். இந்து மதம் மட்டுமின்றி சமண, பவுத்த மதங்களிலும் சரஸ்வதி வழிபாடு உள்ளது. ஜப்பான், பாலித்தீவு உள்ளிட்ட இடங்களிலும் கலைமகள் வழிபாடு உள்ளது.