உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வட மாநிலத்தினர் கோலாகலமாக நவராத்திரி கொண்டாட்டம்

வட மாநிலத்தினர் கோலாகலமாக நவராத்திரி கொண்டாட்டம்

பல்லடம்: பல்லடம் அருகே, வட மாநிலத்தினர் கொண்டாடிய நவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.

பல்லடம் அடுத்த, காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, வடமாநிலத்தினர் ஏற்பாடு செய்திருந்த நவராத்திரி விழாவிற்காக, பிரத்யேக ஷெட் அமைக்கப்பட்டு, அங்கு, விநாயகர் முருகன், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நவராத்திரி விழா முதல் நாளான, அக்., 15 அன்று, கலச யாத்திரையை தொடர்ந்து மா ஷாயல் புத்ரி தேவியாக அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, பிரம்மச்சாரினி, சந்திரகண்டா, கூஷ்மண்ரா, ஸ்கந்மடா, கார்த்தியாயினி, கைராத்திரி, மகா கவுரி, சித்திததிரி ஆகிய தேவியர்களுக்கான சிறப்பு வழிபாடுகள் யாகங்கள் நடந்தன. தினசரி, காலை மற்றும் மாலை நேரங்களில், சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் மற்றும் பஜனைகள் நடந்தன. வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று வழிபட்டனர். பங்கேற்ற பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நேற்று விஜயதசமி கொண்டாட்டம் நடந்த நிலையில், இன்று, காலை, 10.00 மணி முதல் துர்கா தேவி விசர்ஜனம் நடைபெற உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !