ஆகர்ஷண பைரவர் கோவிலில் சியாமளா நவராத்திரி விழா அண்ணாமலை பங்கேற்பு
ADDED :12 minutes ago
அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா காடர்ன் பகுதியிலுள்ள ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை, சியாமளா நவராத்திரி விழா நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று ஸ்ரீ ராஜா மாதங்கி அம்பாளுக்கு பால் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் மற்றும் மந்திர பாராயணம் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதுச்சேரி துணை முதல்வர் நமச்சிவாயம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.