கேட்ட வரம் தரும் ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ADDED :759 days ago
ஷீரடி; மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
கலியுகத்தில் கேட்டவர்க்கு கேட்டவரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழ்கிறார் ஷீரடி பாபா. கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக அவரது பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. சிறப்பு மிக்க இத்தலத்திற்கு இன்று பிரதமர் மோடி வருகை தந்தார். பாபாவின் பாதத்தை தொட்டு சிறப்பு வழிபாடு செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.