செகுடந்தாழி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவீதி உலா
ADDED :709 days ago
கருமத்தம்பட்டி: செகுடந்தாழி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவீதி உலா நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த செகுடந்தாழி ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பழமையானது. இங்கு. நவராத்திரி விழா கடந்த 10 நாட்களாக பக்தி பரவசத்துடன் நடந்தது. சக்தி அழைத்தல், அம்பு சேர்வை உள்ளிட்ட பூஜைகளும், பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவை ஒட்டி, அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக மூலவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. திருவீதி உலாவில், பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ந்தனர். இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.