உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூரில் ராஜராஜ சோழன் சதய விழா

பேரூரில் ராஜராஜ சோழன் சதய விழா

பேரூர்: பேரூரில், ராஜராஜ சோழனின், 1038வது சதய விழா வெகு சிறப்பாக நடந்தது.

சோழ சாம்ராஜ்யத்தில் கொடிகட்டி பறந்த மன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா, தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்நிலையில், திருவாவடுதுறை ஆதினத்தின் பேரூர் கிளையில், கடந்த, 2019ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ராஜரா‌ஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, ராஜராஜ சோழனின், 1038வது சதய விழா, திருவாவடுதுறை ஆதின பேரூர் கிளை மடத்தில் நடந்தது. இதில், ராஜராஜ சோழனுக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, திருமஞ்சன வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜராஜ சோழன் சிறப்பு குறித்த சொற்பொழிவு நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, பேரொளி வழிபாடும், அன்னம் பாலிப்பும் நடந்தது. இதில், சதய விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !