உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமபுரம் ஆதீன மட ஞானப்பிரகாச விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

தருமபுரம் ஆதீன மட ஞானப்பிரகாச விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீன மடத்தில் புதிதாக கட்டப்பட்ட ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு அண்மையில் புதிதாக ஞானபிரகாச விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகாபலிபுரத்தில் செய்து தருவிக்கப்பட்ட ஒன்றரை டன் எடை கொண்ட விநாயகர் சிலை கிரேன் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, விநாயகர் சிலையை சுற்றிலும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு, கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். மேலும், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !