உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம்: மடுகரை லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில், அமாவாசை தினத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், மஞ்சள் பொடி, அபிஷேகப் பொடி கொண்டு திருமஞ்சனம் நடந்தது. உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும் மலர் அலங்காரம், 24 தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து ராமானுஜர் பஜனை சபா குழுவினரின் பஜனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயலாளர் நித்திய கல்யாணி, ரோகிணி, ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !