உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம்; பாளை முகசந்தி விநாயகர் கோயிலில் பரிகார பூஜை

சந்திர கிரகணம்; பாளை முகசந்தி விநாயகர் கோயிலில் பரிகார பூஜை

திருநெல்வேலி; பாளை முகசந்தி விநாயகர் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (29ம் தேதி) தோஷ பரிகார பூஜை நடக்கிறது. இன்று (28ம் தேதி) இரவு 10:05 மணியிலிருந்து நள்ளிரவு 2:30 மணி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனை முன்னிட்டு பாளை முகசந்தி விநாயகர் கோயிலில் நாளை (29ம் தேதி) காலை 9 மணிக்கு தோஷ பரிகார சாந்தி பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மராஜ் பட்டர், சுந்தர ஐயப்பன் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !