பொள்ளாச்சி ஜெய் வீர அனுமன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம்
ADDED :992 days ago
கோவை ; கோவை பொள்ளாச்சி ரோட்டில் இருக்கும் குள்ளக்காபாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ ஜெய் வீர அனுமன் கோவிலில் ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் ஹனுமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் வீர அனுமானை தரிசனம் செய்தனர்.