உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம் ; மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயில் நடை இன்று மாலை அடைப்பு

சந்திர கிரகணம் ; மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயில் நடை இன்று மாலை அடைப்பு

மயிலாடுதுறை ; மயிலாடுதுறை சந்திர கிரகணத்தை முன்னிட்டு மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயில்  நடை மாலை 6 மணிக்கு சாத்தப்படுகிறது என கோயில்  நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐப்பசி மாத பௌர்ணமி தினமான இன்று நள்ளிரவு 1.05 மணிக்கு துவங்கி 2.44 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் நடை சாத்தப்பட்டு மறுநாள் கிரகண சாந்தி ஹோமம் செய்யப்பட்டு அதன் பிறகு நடை திறக்கப்படும். அதன்படி மயிலாடுதுறை திருஇந்தளூரில் சந்திர சாப விமோசனம் பெற்றதும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது கோயிலும் ஆன புகழ்பெற்ற பரிமளா ரங்கநாதர்  கோயில்  நடை சாத்தப்படும் என்றும், ஆறு மணிக்கு மேல் பொதுமக்களுக்கு சேவை கிடையாது என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  நாளை  காலை கிரகண சாந்தி பரிகாரங்கள் செய்யப்பட்டு நடை திறக்கப்படும் என்றும் கோவில்  நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !