உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் கோலாகலம்

பரமக்குடியில் அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் கோலாகலம்

பரமக்குடி; பரமக்குடியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடந்த நிலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி, ஈஸ்வரன் கோயிலில் இன்று காலை 8:45 மணி தொடங்கி சிறப்பு ஹோமங்கள் நடந்தன. பின்னர் அன்னாபிஷேக குழுவினரால் சந்திரசேகர சுவாமிக்கு அன்னத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு மதியம் 12:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது‌. இதே போல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுந்தரேஸ்வரருக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்து அன்னத்தால் கவசமிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தார். மீனாட்சி அம்மன் குமரி அம்மனாக அலங்கரிக்கப்பட்டு காய்கறிகளை அம்மனின் பாதங்களில் சமர்ப்பித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் அறுசுவை உணவு அன்னதானமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நயினார் கோவில் நாகநாத சுவாமி கோயிலில் அன்னாபிஷேக விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !