திரிசூலி பத்ரகாளியம்மன் கோவிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை
ADDED :715 days ago
பொள்ளாச்சி; தாராபுரம் ரோட்டில் உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் எழுந்தருளிக்கும் திரிசூலி பத்ரகாளியம்மன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான், நந்திகேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.