காரமடை அரங்கநாதர் கோவிலில் கால சந்தி சிறப்பு பூஜை
ADDED :781 days ago
மேட்டுப்பாளையம்: சந்திர கிரஹணம் முடிவடைந்ததை எடுத்து காரமடை அரங்கநாதர் கோவிலில் புன்னியாவசனம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்திய நேரப்படி சந்திர கிரஹணம், இன்று அதிகாலை 1:44 மணிக்கு துவங்கி, 2:23 மணிக்கு நிறைவடைந்தது. இதை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில், மூலவர், உற்சவர், ரங்கநாயகி, ஆண்டாள், ராமானுஜர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆழ்வார் ஆகிய சன்னதிகள் மற்றும் பரிவார் தெய்வங்களுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதர் பெருமாள் உற்சவமூர்த்தி சன்னதியில் புன்னியா வசனம், வேத பாராயணம், உபநிஷ், அஷ்டோத்திரம் சற்று முறை சேவிக்கப்பட்டது. தொடர்ந்து கால சந்தி பூஜை மங்கள ஆரத்தியுடன் நிறைவடைந்தது. இதில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.