திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
மயிலாடுதுறை: திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடவூர் மயானம் என்று அழைக்கப்படும் திருமெய்ஞானனத்தில் ஆம்ல குஜாம்பிகா சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 44 வது தலமான இக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அண்ணா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரருக்கு அன்னம், காய்கறி, பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கணேச குருக்கள் அன்னாபிஷேக பூஜைகளை நடத்தி வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில், வதான்யேஸ்வரர் கோவில், சீர்காழி தாளபுரீஸ்வரர், நாகநாதர் கோவில், ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.